-அருட்தந்தை வசந்தன்-
-அன்ரனி திலக்-
2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் வட, கிழக்கில் போதைப் பொருள் பாவனை பூஜ்ஜியமாக இருந்ததாக கட்டைக்காடு ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன் தெரிவித்தார்
கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் அவர் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
நாட்டில் போதை பொருளின் தாக்கம் அதிகரித்துள்ளது.குறிப்பாக எங்களுடைய தமிழர் தாயகம் வரலாறு காணாத அளவிற்கு போதைப் பொருளின் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளது.
இன்று போதைப் பொருள் தொடர்பான செய்திகளை நாங்கள் அடிக்கடி பத்திரிகைகள் பார்க் முடிகின்றது. இந்தப் போதைப் பொருளுக்கு பலர் நாளாந்தம் அடிமையாகிக் கொண்டிருக்கின்றனர்.
2009க்கு முன்னரான காலப்பகுதிகளில் தமிழர் தாயகத்தில் போதைப் பொருள் பூச்சியமாக இருந்த நிலையில்,இப்போது போதைப் பொருள் தொடர்பான புதுப்புது விடயங்களை நாங்கள் அறிந்து கொண்டிருக்கிறோம்.
போட்டிகளில் நீங்கள் சிறந்த முறையில் விளையாட வேண்டும் என்றால், நீங்கள் ஒரு ஆரோக்கியமான உடலை கொண்டிருக்க வேண்டும்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஆரோக்கியம் மிக முக்கியமானது. இன்று வாழ வேண்டிய பலர் தங்களுடைய வாழ்வை போதையால் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே 2009 ஆண்டுக்கு முன்னரான வாழ்வியலை மீண்டும் கட்டியெழுப்பி நாம் அனைவரும் போதையற்ற ஒழுக்க சீலர்களாக சமூகத்தில் ஆரோக்கியமாக வாழ முன்வர வேண்டுமென கோருகின்றேன் என்றார்.


















