-யாழ்ப்பாணத்தில் தனிநபர் செலவு 16,327-
இலங்கையில் ஒரு தனிநபரின் அடிப்படைத் தேவைகளுக்கான குறைந்தபட்ச செலவு 16,730 ரூபாய் என தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த தரவுகளின் படி, ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளுக்கான அதிகப்பட்ச செலவுள்ள மாவட்டமாக கொழும்பு குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு ஒரு தனிநபருக்கு 18,044 ரூபாய் தேவை, மிகக் குறைந்த செலவுள்ள மாவட்டமாக மொனராகலை மாவட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு, 15,997 ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டிருக்கின்றது.
வறுமைக்கோடு என்பது ஒரு நபருக்கு அடிப்படை உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச செலவினத்தைக் குறிக்கிறது.
மேலும் இது பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் மாதந்தோறும் திருத்தப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்கள தரவுகளின்படி 2012 – 13ம் ஆண்டுகளில் வீட்டு வருமானம் மற்றும் செலவு கணக்கெடுப்பின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ வறுமைக்கோடு புதுப்பிக்கப்பட்டது.
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டை பயன்படுத்தி விலை வேறுபாடுகளை சரிசெய்து, மாவட்ட அதிகாரப்பூர்வ வறுமைக் கோடுகள் மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை யாழ்ப்பாணத்தில் ரூ.16,327 ஆகும்


















