மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் தாக்குதல்கள் புதிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (27) இந்திய மாலுமிகளை ஏற்றிச் சென்ற பனாமா கொடியிடப்பட்ட எம்டி லூயிஸ் 1 என்ற எண்ணெய் கப்பல் மீது ஒட்டுக்கண்ணித் தாக்குதல் நடத்தப்பட்டது.
பெப்ரவரியில் அமெரிக்க-ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, இந்த முக்கிய நீர்வழியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட முதல் வெற்றிகரமான தாக்குதல் இதுவாகும் என கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலால் கப்பலின் இயந்திர அறையில் தீப்பிடித்தது, இதனால் அந்த டேங்கர் கப்பல் தற்காலிகமாகச் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
இருப்பினும், கப்பலில் இருந்த 27 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர், அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.
இந்தியக் குழுவினரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய, மத்திய அரசு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கப்பல் நிர்வாக நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


















