யாழ். பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர்களான முருகமூர்த்தி கீர்த்திகன், சிவராசா தர்ஜன் ஆகியோர் பட்டங்கள் பெற்றனர்.
40 ஆவது பட்டமளிப்பு விழா கடந்த 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நான்கு தினங்கள் இடம்பெற்றிருந்தது.
இப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாளான 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முருகமூர்த்தி கீர்த்திகன் சிறப்புக் கலைமாணியாகவும் மூன்றாம் நாளான 21 ஆம் திகதி சனிக்கிழமை சிவராசா தர்ஜன் பொதுக்கலைமாணியாகவும் பட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.
50 வருடங்களாக விழிப்புலனற்றவர்களுக்காக பணியாற்றி வருகின்ற யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் 107 உறுப்பினர்கள் இதுவரை பட்டதாரிகளாக மிளிர்ந்துள்ளனர்.


















