வவுனியா மாவட்டத்தில் 2025 ஜனவரி தொடக்கம் ஒக்ரோபர் 15 ஆம் திகதி வரை 64 வீதமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலையப் பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு சராசரியாக 1200 தொடக்கம் 1300 மில்லிமீற்றர் அளவிலேயே மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறுகின்றது.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் ஜனவரி முதல் ஒக்ரோபர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 834.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்நிலையில் வருகின்ற 75 நாட்களிற்குள் 465.7 மில்லிமீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியே பதிவாகும் எனவும் இனிவரும் காலப்பகுதியில் பெய்யும் மழை சாதாரண மழையாகவே காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை அதிகமாக காணப்பட்டாலும் சராசரி மழைவீழ்ச்சியாகவே காணப்படும்.
மேலும், இக்காலப்பகுதியில் தாழமுக்க நிலை ஏற்படும் பட்சத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி ஏற்படுவதற்கான நிலைமை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.


















