-த.அம்பிகாவதி-
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரண்டு மாத விளக்கு வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான கவிதைப் பயிலரங்கு அண்மையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த கவிதைப் பயிலரங்கில் கிளிநொச்சி வடக்கு வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் கலைச்செல்வி ஞானசேகர் மற்றும் ஆசிரிபர் வீ.சந்திரமோகன் ஆகியோர் வளவாளர்களாக பங்குபற்றி இருந்தனர்.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தமிழ்ப் பாட ஆசிரியர்கள், மாணவர்கள், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர், இந்துக் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் கவிதை தொடர்பான கருத்துரைகளை தொடர்ந்து மாணவர்கள் கவிதை எழுதுவதற்கு ஊக்குவிக்கப்பட்டனர். அதில் கவிதை எழுதிய மாணவர்களின் கவிதைகள் நிகழ்வின் முடிவில் வாசிக்கப்பட்டதுடன், கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


















