இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியின் புதிய ஆய்வுகூடம் ஒன்றுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது பிரதமர் ஹரிணி, சமூகவியல் இளங்கலைப் பட்டத்தைப் பூர்த்தி செய்த டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது, டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியின் புதிய ஆய்வுகூடத்திற்கு ஹரிணி அமரசூரிய சமூக மற்றும் இனவியல் ஆய்வுகூடம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


















