அம்பாந்தோட்டை, மித்தெனிய, தோரகொலயாய பிரதேசத்தில் ஜூன் மாதம் 24 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் தங்காலை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தங்காலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 15 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் வீரகெட்டிய, ஹக்மீமன ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


















