தென் மாகாணத்தில் உள்ளூர் அபராதங்களை GovPay மூலம் இன்று திங்கட்கிழமை முதல் செலுத்த முடியும் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த வசதி அடுத்த மாதம் வடக்கு மாகாணத்திலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இந்த வருட இறுதிக்குள் 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக அபராதம் செலுத்த தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டியிருந்தாலும், தற்போது GovPay மூலம் தொலைபேசி அல்லது பிற இலத்திரனியல் சாதனத்தைப் பயன்படுத்தி எங்கிருந்தும் எளிதாக பணம் செலுத்த அனுமதிக்கிறது.

















