திருகோணமலை புல்மோட்டை கனியமணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கோரி தொடர்ச்சியாக நேற்று ஏழாவது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் பெரிதும் பொருளாதார ரீதியாக தங்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் உரிய துறைசார் அமைச்சர், அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் தங்களுக்கு சாதகமான தீர்வை பெற்றுத் தரக் கோரியும் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

















