-ஞானத்தமிழ்-
சிறகுகள் அமையம் விஞ்ஞானப் புனைவு கதை எழுதும் போட்டியை மாணவர்களிடையே நடாத்தவுள்ளது.
இப்போட்டி தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களின் கற்பனைக்கு வித்திட்டு எதிர்காலம், பிரபஞ்சம், புதிய கண்டுபிடிப்புகள் என்பவற்றை உள்ளடக்கி 200 முதல் 350 சொற்களுக்குள் விஞ்ஞானப் புனைவு கதையை எழுத முடியும்.
இப்போட்டிக்கு எழுதப்பட்ட விஞ்ஞான கற்பனைப் படைப்புக்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்பாக அல்லது அன்றைய தினம் sirakukalinfo@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாக அல்லது ‘சிறகுகள் அமையம், இல.21 சீனீயர் ஒழுங்கை, யாழ்ப்பாணம்.’ என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பமுடியும் எனவும், மேலதிக விபரம் அறிவதற்கு 077 563 4824 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















