-த.சுபேசன்-
போதைகள் அற்ற மேதைகள் சமூகத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் நாவற்குழி மகா வித்தியாலய மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
போதைப்பொருள், தற்கொலை, வீடியோ கேம் போன்ற சமூக விரோத செயற்பாடுகளுக்குள் மாணவர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்கும் முகமாக மேற்படி விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ம.நடனதேவனின் கோரிக்கைக்கு அமைவாக சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளர் இ.யோகேஸ்வரனின் ஏற்பாட்டில் மேற்படி விழிப்புணர்வுச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
விழிப்புணர்வுச் செயற்திட்டத்தை சாவகச்சேரி பொலிஸ் நிலைய பல்வகை முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பதிகாரி க.ஜெயரூபன் முன்னெடுத்திருந்தார்.


















