-ஞானத்தமிழ்-
அனலைதீவு தெற்கு கலட்டி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சங்கரநாதர் முருகமூர்த்தி ஆலய வருடாந்த பெருந்திருவிழா நாளை புதன்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
பத்துத் தினங்கள் நடைபெறவுள்ள இப்பெருந்திருவிழாவில், தினமும் காலை 8 மணிக்கு பகல் திருவிழாவும், மாலை 5.30 மணிக்கு இரவுத் திருவிழாவும் ஆரம்பமாகி நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு சூரசங்கார நிகழ்வும், 30 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு தேர்த் திருவிழாவும் மறுநாள் வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.


















