-கஜிந்தன்-
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரை கொலைசெய்த பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு இஷாரா செவ்வந்திக்கு உதவி செய்ததாக கூறப்படும் 4 சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி அண்மையில் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் கொலைச் சம்பவம் இடம்பெற்ற பின்னர் இஷாரா செவ்வந்தி தங்கியிருந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையிலேயே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
படம் 4


















