கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன்
சாவகச்சேரி – நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
நாவற்குழி – ஐயனார் கோவிலடிப் பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதியும், அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த 15 ஆம் திகதி தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைச்காக அனுமதித்தார். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி குறித்த யுவதி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.


















