மன்னாரில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முன்னெடுக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் நிறுத்தப்படவில்லையெனவும் அந்தத் திட்டம் முறையாக நடைபெறுவதாகவும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை சிறீதரன் எம்.பி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் மன்னாரில் சுகாதாரம் மற்றும் கழிவு நீர் மூகமைத்துவ மேம்பாட்டு திட்டம் 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2016 இல் நிறைவு செய்யப்பட்டது. இதன்மூலம் மன்னார் பகுதியில் சுகாதாரம் மற்றும் நீர்வழங்கல் நடவடிக்கைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய வேலைத்திட்டங்கள் எவ்வித இடையூறுகளும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் மன்னார் நகர சபையில் கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பான வேலைத்திட்டமே இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமானது அல்ல. இது தொடர்பில் நகர சபையின் பக்கத்திலேயே கேட்க வேண்டும் என்றார்.


















