மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை மதியம் மழையுடன் வீசிய மினி சூறாவளியினால் வீசியதால் 68 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.சி.எம். சியாட் தெரிவித்தார்.
இந்த அனர்த்தத்தால் ஆரையம்பதி, காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புதூர் சேத்துக்குடா உட்பட பல பிரதேசங்களின் வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, அனர்த்தத்தால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் சிலமணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


















