-த.சுபேசன்-
அரியாலை, நாவலடி உதயதாரகை சிறுவர் கழகத்தின் சிறுவர் தினக் கொண்டாட்டம் சிறுவர் கழகத்தின் உப தலைவர் தலைமையில் உதயசூரியன் விளையாட்டுக்கழக மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
நாவலடி, பூம்புகார், மணியந்தோட்டம், வேளாங்கண்ணி தோட்டம் ,உதயபுரம் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்களுடன் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான நிறுவனம், நல்லூர் பிரதேச செயலகம், சி.சி.எச். நிறுவனம், யாழ்ப்பாண சிறுவர், பெண்கள் பொலிஸ் பிரிவு ஆகியன இணைந்து மேற்படி சிறுவர் தினத்தை சிறப்பித்திருந்தனர்.

மேலும் சிறுவர்களுக்கு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டது.


















