இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் 2026 ஜூன் 14 வரையான காலப்பகுதியில் டீசல் (0.05% MS) 1,400,000 10+- 5% (05 கப்பல்கள்) பெறுகைக்கு நீண்டகால ஒப்பந்தமொன்றை வழங்குவதற்காக கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடம் விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன.
இதற்காக 7 விலைமனுதாரர்கள் விலைமனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
உயர் மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய குறித்த பெறுகையை சிங்கப்பூரின் M/s Trafigura Pte.Ltd இற்கு வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


















