பிரமிட் திட்டம் நடத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு சந்தேகநபர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 40 முதல் 64 வயதுக்கு இடைப்பட்ட இரத்மலானை, பன்னிபிட்டிய, கல்நெவ, ஹோகந்தர, பேராதனை மற்றும் கொழும்பு 4 பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.


















