கிளிநொச்சி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூறு மரங்கள் நாட்டும் நிகழ்வு பாடசாலை மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.
1927 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையின் நூற்றாண்டு விழா 2027 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக மேற்கொள்ள திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு முன்னோடி நிகழ்வாக நூற்றாண்டு நோக்கிய பயணத்தில் நூறு மரக்கன்றுகள் நாட்டுதல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் சின்னத்தம்பி ஞாபகமாக அவரது பேரன் யோகலிங்கம் புஸ்பராஜாவின் நிதி பங்களிப்பில் இந்நிகழ்வு மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் அனுசரணையாளர்கள் சார்பில் மாரிமுத்து பேரம்பலம், திருமதி லிலிதா கலைறஞ்சன், பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


















