-செ.கபிலன்-
தேசிய போதைப் பொருள் தடுப்பு வேலைத் திட்டத்தின் கீழ் கொடிகாமம் பொலிஸாரினால் வரணி மத்திய மகா வித்தியாலயத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு குழு மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த செயல்பாடு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போதைப்பொருள் பாவனையில் இருந்து மாணவர்கள் எவ்வாறு தப்பித்துக் கொள்வது, போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் அபாயங்கள் தொடர்பிலும் இதன்போது விளக்கம் அளிக்கப்பட்டதுடன் இது தொடர்பான கலந்துரையாடல் மாணவர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் வேண்டாம், போதைப் பொருள் பாவனையில் இருந்து மாணவர்கள் விடுபடுவதை எவ்வாறு செயல்படுத்துவோம், அதற்கு அடிமையானவர்களை எவ்வாறு மீட்டெடுப்போம் என்பது தொடர்பிலும் இதன்போது செய்து காண்பித்ததுடன் போதைப் பொருள் விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளை ஏந்தியவாறும் கவன ஈர்ப்பிலும் ஈடுபட்டனர்.


















