-ஞானத்தமிழ்-
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் இலக்கிய மாதத்தை முன்னிட்டு நடாத்தும் பிரதேச இலக்கிய விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலர் திருமதி ஹ.சத்தியஜீவிதா பிரதம விருந்தினராகவும், கிளிநொச்சி மாவட்ட கலாசார உத்தியோகத்தர் செ.ரூபகுமார் சிறப்பு விருந்தினராகவும், கலாபூசணம் சு.புத்திசிகாமணி மற்றும் மூத்த கலைஞர் பே.ஜேசுதாசன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.


















