கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட க/தொலஸ்பாகை பாடசாலைக்கு சொந்தமான காணியை பிரதேச அரசியல்வாதி ஒருவர் கையகப்படுத்த முயற்சி செய்வதாக கூறி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கங்க இர்ளகோரல பிரதேச சபை உறுப்பினர் ரஞ்சி லியனகேதர என்பவர் அத்துமீறி தனது காணி என உரிமை கொண்டதற்கு எதிராகவே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை மாணவர்கள் வெறும் தரையில் அமர்ந்து கோசம் எழுப்பி தங்களின் எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர்.


















