-இ.கலைஅமுதன்-
கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கிராமிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் சுன்னாகம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் பனைசார் உற்பத்தியாளருக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சுன்னாகம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்க காரியாலயத்தில் நேற்று நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், யாழ்.மாநகர சபை உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளருமான சு.கபிலன், துறைசார் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


















