வவுனியா மாநகரசபையின் கடை வழங்கலில் முறைக்கோடுகள் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டுமெனக் கோரி வடமாகாண ஆளுநருக்கு மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாநகரசபை அமைக்கப்பட்டதன் பின்னராக வவுனியா இலுப்பையடி பகுதி மற்றும் நகரைச் சூழ்ந்த வீதியோர அங்காடி வியாபார நிலையங்கள் அகற்றப்பட்டிருந்தன.
அவ்வாறு அகற்றப்பட்டவர்களிற்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக 60 வியாபாரிகளிற்கும், மாநகரசபையின் முன்பாக அமைந்த காணியில் 75 வியாபாரிகளிற்கும் கடைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை இவ்வாறு வழங்கப்பட்ட கடைகளில் வீதியோர வியாபாரத்தில் முன்னர் ஈடுபடாதவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் கடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனூடாக முறைக்கோடுகள் நடந்துள்ளதா என ஆராயப்பட வேண்டும் என தெரிவித்து ஆளுநருக்கு மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வவுனியா மாநாகரசபையினால் 135 அங்காடி வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















