-2026ம் ஆண்டுக்கான பாதீட்டு உரையில் ஜனாதிபதி அநுர-
-அறிவிக்கப்படாத மன்னர் ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டுவிட்டது-
ஊழல் – போதைப் பொருள் – பாதாள உலகம் இல்லாத தூய்மையான நாட்டை உருவாக்கும் உன்னதமான எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம் என கூறியிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனியார்துறையின் விரோதி என்றும், சொத்துக்களை பறிப்பார்கள் என்றும் பரப்பப்பட்டிருந்த பொய்கள் இன்று அம்பலப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
2026ம் ஆண்டுக்கான பாதீட்டு உரையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், முதலீடுகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் வியாபாரம் செய்வதற்கான வசதிகளை உறுதிப்படுத்தவும் தேவையான, அரசியல்வாதிகளின் நிழலின் கீழ் இந்நாட்டின் வரலாற்றில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை நாம் துடைத்தெறிந்துள்ளோம். பயங்கரமான ஊழல் மற்றும் மோசடி மூலம் மறைக்கப்பட்டிருந்த கள்வர்கள் குழுவுடன் கூடிய அரசியல் அதிகாரத்தை தோல்வியடையச்செய்து சட்டத்திற்கு தலை வழங்குகின்ற மற்றும் நாட்டை நேசிக்கின்ற பொறுப்பு மிக்க ஆட்சி முறைமை ஒன்றுக்கு எமது நாட்டை நாம் மாறுதலடையச் செய்துள்ளோம். அதிகாரத்திற்கு வந்து முதல் ஒரு சில மாதங்களுக்குள்ளே தமது நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் சிறப்புரிமைகளை வழங்கிய, ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே மத்திய வங்கியை கொள்ளையடித்த காலப்பகுதியை நாம் அனுபவித்துள்ளோம்.
ஆட்சிக்கு வந்து ஒரு சில மாதங்களுக்குள்ளேயே தமது நண்பர்களுக்கே கோடிக்கணக்கான வரிச் சலுகைகளை வழங்கிய ஆட்சிக் காலத்தை நாம் அனுபவித்துள்ளோம். ஆட்சிக்கு வந்து ஒரு சில மாதங்களுக்குள் அவர்களுக்கு ஏற்றவிதத்தில் சட்டத்துறையையும் நீதித்துறையையும் அரசியல்மயப்படுத்திய ஆட்சிகளை நாம் கண்டுள்ளோம். ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலப்பகுதியினுள் மருந்துக்குப் பதிலாக நீர் ஊசி மருந்துகளை இந்நாட்டிலுள்ள அப்பாவிப் புற்று நோயாளருக்கு வழங்கிய மெய்சிலிர்க்கும் ஆட்சிகளை நாம் கண்டுள்ளோம். பயங்கரமான ஒழுக்கநெறியற்ற அவலட்சணமான முறைமையை நாம் மாற்றியுள்ளோம்.
அரசியல்வாதிகள் சிறப்புரிமைக்கு தகுதியானவர்கள் அல்ல அரசியல்வாதிகள் மக்களுக்கு மேலானவர்கள் அவர்களை அடிமைகளாக நடாத்துபவர்கள் அரசர் அல்லது மாண்புமிக்க தெய்வங்கள் என்ற அந்தஸ்த்தை மாற்றியுள்ளோம். அவர்கள் அளவுக்கு மீறிய சிறப்புரிமைகளுக்கு தகுதியான ஒருவரல்ல என்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளோம்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் ஒருவராக அவர் இருக்கலாம். எனினும் சாதாரண மக்களைப் போன்று அவர் சாதாரணமான ஒருவரே என்பதனை இக்குறுகிய காலப்பகுதியினுள் சமூகத்தில் நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.
முன்னால் சனாதிபதிகளின் அளவுக்கு மீறிய சிறப்புரிமைகளை நாம் அகற்றியுள்ளோம். சிலர் இதை வலியாக உணரலாம் ஆனாலும் நாம் மக்களின் ஆணைக்கு அமைவாகப் பணியாற்றுகின்றோம்.
ஒரு நாட்டில் மில்லியன் கணக்கான மக்கள் ஒருவேளை கூட உணவின்றி உறங்கச் செல்லும் ஒரு நாட்டில், தமது உயிர்களைக் காப்பதற்கு மருந்து வாங்குவதற்கு வழியின்றி மக்கள் வருந்தும் ஒரு நாட்டில், அப்பாவி இளைஞர்கள் தொழிலின்றி வருந்தும் ஒரு நாட்டில் சிறப்புரிமைகளை தொடர்ந்தும் அனுபவிப்பது முன்னால் சனாதிபதிகளுக்கு நெறிமுறையொன்றாக அமையுமா? அதனை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்பது சாத்திமா?
வரலாற்றில் தமது நண்பர்களுக்கு அனைத்துச் சிறப்புரிமைகளையும் வழங்குவதற்கு தேவையான அளவு சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் பாதாள உலகு மற்றும் போதைப்பொருளில் ஈடுபட்டுள்ள பலர் அரசியல் நிழலின் கீழ் இருந்தனர். இன்று அவர்கள் அவை அனைத்தையும் இழந்துள்ளனர்.
பல்வேறு பதவிகளுக்கும் நியமனங்களை மேற்கொள்கின்ற போது திறமை, இயலுமை, நேர்மை, நாட்டுக்காக பணியாற்ற விருப்பம் என்பவற்றை நாம் தேடினோமேயன்றி அவர்கள் எமக்கு உதவினார்களா அல்லது எங்களில் ஒருவராக இருந்தார்களா என்பதே அல்ல.
நீண்டகாலமாக எமதுநாடு பற்றி முதலீட்டாளர்கள் இருண்ட எண்ணப்பாங்கினைக் கொண்டிருந்தனர். அத்தகைய இருண்ட எண்ணப்பாங்கை நாம் மாற்றியுள்ளோம். முதலீட்டாளர் எமக்கு சொத்தொன்றாகும்.
முதலீட்டுக்காக பொருத்தமான சுழலை தோற்றுவித்து அவசியமான வசதிகளை எவ்வித தாமதமுமின்றி அவர்களுக்கு வழங்குவதற்கு அவசியமான சூழலை நாம் உருவாக்குகின்றோம்.
இலங்கையை முதலீட்டாளர்களுக்கு சாதகமான சொர்க்கபுரியாக மாறுதலடையச்செய்யும் பொருட்டு நாம் சட்டவாட்சி நீண்டகால அரசாங்கக் கொள்கைகள், சுயாதீன நீதித்துறை மற்றும் ஊழல் இல்லாத முதலீட்டு நேயம் மிக்க சுழல் என்பவற்றை ஏற்கனவே உருவாக்கியுள்ளோம்.
ஒவ்வொரு இலங்கையரும் நல்வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்ற எனது நோக்கினை அடைவதற்கான பாதை மற்றும் கனவினை நனவாக்குவதற்காக தூய எதிர்பார்ப்புடன் இந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம்.
இன்று என்ன நடந்துள்ளது எனில் மக்களின் இடுப்புப் பட்டியை தளர்வடையச் செய்து அரசியல் வாதிகளுக்கான பட்டி இறுக்கமடையச் செய்யும் உதாரணமொன்று இடம்பெற்றுள்ளது.
ஒரு நாட்டின் வரவுசெலவுத்திட்டம் என்பது வெறுமனே தேசமென்ற வகையில் நாம் உழைப்பதை, நாம் செலவிடுவதை, நாம் கடன்பெறுவதை அளவிடுகின்ற கணக்கீட்டுச் செயன்முறை ஒன்றல்ல.
துரதிஷ்ட வசமாக எமது நாட்டுக்கு வெளியில் சென்ற பல ஆற்றல் படைத்தோர் பலர் காணப்படுகின்றனர். ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கு அவர்கள் தலைகுனியாமை காரணமாக சிலர் நாட்டை விட்டுச் சென்றனர். அல்லது நாட்டிலிருந்து அவ்வாறான உண்ணத மிக்கவர்களை ஆட்சியாளர்கள் வெளியேற்றினர். நான் இன்று அழைப்பு விடுக்கின்றோம் அவர்களுக்காக இந்நாடு தடைசெய்யப்பட்டிருந்த காலம் முடிவடைந்துவிட்டது
மிகவும் அழகான நாடொன்றுக்காக ஒவ்வொரு கனவையும் தியாகம் செய்து அவ்வழகிய நாடு பிறப்பதற்கு முன்னரே மரணித்த ஒவ்வொரு இதயமும் இந்நாடு அழகான நாடொன்றாக தோற்றம் பெறுவதைக் காணும் கனவைக் கொண்டிருந்தது.


















