பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை 11 அதிக டெங்கு ஆபத்துள்ள மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை, 41,324 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், 4 வகையான டெங்கு வைரஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


















