பொலிஸாரிடமிருந்து தப்பியோடிய நபரின் சடலம் கிண்ணியா – ஈச்சந்தீவில் மிதந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி, சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டுவந்த கும்பலை கடற்படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இதன்போது, தப்பிச்சென்ற ஒருவரே சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் ஆலங்கேணியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பின் போது சுமார் 2000 லீற்றர்களைக் கொண்ட வாளிகளையும், அதனை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கிண்ணியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















