-கஜிந்தன்-
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பாதீடு பதின்மூன்று உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சபை அமர்வு தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில் சபையின் பதின்மூன்று உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்த நிலையில் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.


















