-த.அம்பிகாவதி-
முகாவில் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டிலான முதியோர் தின விழா நற்பணி மன்றத் தலைவர் தி.தஜேந் தலைமையில் முகாவில் திரியாய் அம்மன் ஆலயத்தில அண்மையில் நடைபெற்றது.
இந்தநிகழ்வில் பிரதம விருந்தினராக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இ.த. ஜெயசீலன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக சக்தி அக்றோ நிறுவன முகாமையாளர் றஹ்மான், இலங்கை நிர்வாக சேவை பயிலுநர் சஜீவன் மற்றும் சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறுமிகளின் வரவேற்பு நடனம் மற்றும் கலை நிகழ்வுகள், முதியவர்களின் பாடல் , கவிதை , பேச்சு போன்ற நிகழ்வுகளுடன் முதியவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன. தொடர்ந்து முகாவில் கிராமத்தில் வயது கூடிய ஆண் முதியவர் இலட்சுமணன் கணபதி, பெண் மூதாட்டி பேரம்பலம் நாகாத்தை ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். முகாவில் முதியவர்கள் அனைவரும் பெறுமதியான பரிசுப்பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர.; போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்றவர்களுக்கும் பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்பட்டது.


















