மூத்த திரைப்பட இயக்குனர் சனத் அபேசேகரவின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் லஞ்சம் கேட்ட நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சனத் அபேசேகர என்ற பெயரில் போலியான பேஸ்புக் கணக்கை உருவாக்கி, அதன் மூலம் நடிகைகளை அழைத்து, படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பணம் மற்றும் பாலியல் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக சனத் அபேசேகர குற்றப் புலனாய்வுத் துறையில் முறையிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நேற்று புதன்கிழமை கொழும்பு அளுத்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


















