தொல்பொருள் ஆலோசனைக் குழுவில் சிறுபான்மை இனத்தவர்கள் 4 பேரை உள்வாங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டதாகவும், இதனையடுத்தே இந்த ஆலோசனைக் குழுவில் சிறுபான்மையினத்தவர்களை உள்வாங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு தமிழர்களையும் இரண்டு முஸ்லிம்களையும் தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 19 இலிருந்து 14 ஆக குறைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


















