உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்.நீரிழிவு கழகமும், வை.எம்.சி.ஏ. நிறுவனமும் இணைந்நு நடத்தும் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை யாழ். கச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த பரிசோதனை முகாமில் நீரிழிவு பரிசோதனை, இரத்த அழுத்தம், உடல் திணிவுச்சுட்டி, வைத்திய ஆலோசனைகள் என்பன இடம்பெறவுள்ளன.


















