போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட ஜீப் வாகனம் ஒன்று குருணாகலில் பன்னல, எலபடகம பிரதேசத்தில் வைத்து மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை பிரதேசத்தில் உள்ள நபரொருவரிடமிருந்து இந்த ஜீப் வாகனத்தை கொள்வனவு செய்ததாக அதன் உரிமையாளர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
10 வருடங்களுக்கு முன்னர் இந்த ஜீப் வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜீப் வாகனத்தை விற்பனை செய்த மாத்தளை பிரதேசத்தில் உள்ள நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


















