பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘லொக்கு பெட்டி’ என்பவரின் சகாக்கள் இருவர் அளுத்கமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அளுத்கமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவைளப்பில் சந்தேக நபர்கள் இருவரும் அளுத்கமை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் இந்துருவ மற்றும் உரகஸ்மன்ஹந்திய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 24 வயதுடையவர்கள் ஆவார்.
சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள், மோட்டார் சைக்கிள், கையடக்கத் தொலைபெசி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த 26 இலட்சம் ரூபாய் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட இருவரும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அளுத்கமை பொலிஸார் தெரிவித்தனர்.
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘லொக்கு பெட்டி’ என்பவர் கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெலாரஸில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















