வவுனியாவுக்கான குடிநீர் விநியோக நீர்தேக்கமான பேராறு நீர்த்தேக்க நீரை பருகுவதால் ஆபத்தில்லை என வவுனியா மாவட்ட நீர் விநியோக வடிகாலமைப்பு அதிகார சபையின் பொறியிலாளரொருவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தில் நேற்று முன் தினம் புதன் கிழமை முதல் மீன்கள் இறந்து கரை ஓதுங்கி வருகின்றன. இவ்வாறு மீன்கள் இறந்து கரையொதுங்குவதற்கு காலநிலை மாற்றம் காரணம் ஆகும்.
நீரில் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. எனவே, மக்கள் அச்சமின்றி பேராறு குடிநீர் திட்ட நீரை பருக முடியும் எனவும் பொறியிலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


















