தேக்கு மரம் வெட்டுவதற்கு இரண்டு அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்குத் தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக 10,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வன ஜீவராசித் திணைக்கள அதிகாரி ஒருவரை, நேற்று முன்தினம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தெஹியத்தகண்டிய வன ஜீவராசி திணைக்கள அதிகாரி அலுவலகத்திற்குப் பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு உரிமத்திற்கு 5,000 ரூபா மற்றும் இரண்டு உரிமங்களுக்கு 10,000 ரூபா என பணம் கேட்டபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்தவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


















