வடமாகாண சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண சுற்றுலாத்துறையின் அனுசரணையில் வவுனியாப் பல்கலைக்கழக வியாபாரக் கற்கைகள் பீடத்தின் நெறிப்படுத்தலில்; முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பீட பீடாதிபதி பேராசிரியர் யோ. நந்தகோபன் தந்திரோபாய சுற்றுலாத் திட்டமிடலுக்கான சிறப்பு வளவாளராக கலந்து சிறப்பித்து தரவுகளைப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் பத்திநாதன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன், சிரேஸ்ர விரிவுரையாளர்களான திருமதி மதிவதனி, சிவநேந்திரா மற்றும் றுகுணு பல்கலைக்கழக கலாநிதி சம்பிக லியனகே, சி.சிவநேந்திரா வவுனியாப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர், பிரதேச செயலர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், வன வள அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், பொறியியலாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான அனுபவம் சார்ந்த உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


















