அனைத்து அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பாவனைக்கான தேவையை முற்றாக நீக்குவதற்கும் இந்த குழுக்கள் செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஊடாக அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது.
இந்தச் சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு நிறுவனத் தலைவரும் தமது நிறுவனத்தை போதைப்பொருள் அற்ற நிறுவனமாக உறுதிப்படுத்துவது கட்டாயம் என வலியுறுத்துகின்றது.


















