முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் விளாத்திகுளம் கிராமத்தில் 8 அடி நீளம் கொண்ட குறித்த வெங்கிணாந்தி பாம்பினை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பிடித்துள்ளனர்.
விளாத்திகுளம் கிராமத்தில் நேற்று காலை வீடு ஒன்றுக்குள் வெங்கிணாந்தி பாம்பு புகுந்துள்ளது.
இதனை கண்ட வீட்டின் உரிமையாளர்கள் வனஜீவராசி திணைக்களத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
குறித்த பகுதிக்கு விரைந்த முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் 8 அடி நீளம் கொண்ட பாம்பினை பிடித்தனர்.
இதையடுத்து இப்பாம்பினை முல்லைத்தீவு,வவுனிக்குளம் சரணாலயத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விட்டுள்ளனர்.


















