-முஜிபுர் ரஹ்மான் எம்.பி.குற்றச்சாட்டு-
தாஜுதீன் கொலை சாட்சியங்களை மறைத்தவர் தற்போது ஜனாதிபதியின் ஆலோசகராக உள்ளதால் இந்த அரசாங்கம் ஒருபோதும் தாஜுதீனின் கொலையாளிகளை கைது செய்யப் போவதில்லையென முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு, மேலும் தெரிவித்திருப்பதாவது:
தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தில் அலரிமாளிகையில் இருந்து 60 தொலைபேசி அழைப்புகள் நாரஹேன்பிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு சென்றுள்ளன. அந்த தொலைபேசி அழைப்புகள் அலரிமாளிகையின் எந்த பிரிவில் என்பதை தேடிக்கொள்ள முடியாமல் போனது. ஆனால் அதனை தற்போது ஜனாதிபதியின் டிஜிட்டல் ஆலாசேகராக இருப்பவரின் நிறுவனத்தினால் அதனை செய்ய முடியும்.
ஆனால் அதனை அவர் செய்யாமல் இழுத்தடித்துக்கொண்டிருந்தார்.ஏனெனில் அவர் அன்று இருந்த ஆட்சியாளர்களின் சிறந்த நண்பனாக இருந்தார். அவ்வாறுதான் தாஜுதீனின் வழக்கு விசாரணைகளை தள்ளிப்போட்டார்கள்.
தற்போது அவர் ஜனாதிபதியிள் ஆலாசேகராக வந்துள்ளார். அதனாலே அரசாங்கம் தாஜுதீனின் கொலையாளிகளை கைதுசெய்யப்போவதில்லை. முடிந்தால், தாஜுதீனை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்குமாறு சவால்விடுகிறேன் என்றார்.


















