மத்துகம – ஹெனேகம பகுதியில் உள்ள பொது நூலகத்திற்குள் நுழைந்து கத்தி முனையில், 2 லட்சம் பெறுமதியான தங்க நகை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நூலகத்துக்குள் நுழைந்த ஒருவர் நூலக உதவியாளரைக் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த நகையைக் கொள்ளையடித்துள்ளதாக மத்துகம காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நூலகத்துக்கு உந்துருளியில் வந்த இருவரில் ஒருவரே இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் மத்துகம காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















