-ஞானத்தமிழ்-
மாதகல் ஆரியங்காவு ஐயப்பன் தேவஸ்தானம் வருடாந்த மகர சங்கிராந்தி மகரவிளக்கு மண்டல விரத உற்சவ பெருவிழா கார்த்திகை மாதம் 1 ஆம் நாள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
அன்றைய தினம் காலை 7 மணிமுதல் கன்னிமூல கணபதிக்கு கணபதி ஹோமம் கன்னிமூல கணபதிக்கு விசேட அபிசேகம் இடம்பெறவுள்ளது.
இதையடுத்து பூஜை நடைபெற்று மகர மண்டல புனித விரதமாலை அணிவித்தல், பஜனைகளைத் தொடர்ந்து வசந்தமண்டப பூஜை, சுவாமி எழுந்தருளல், மண்டலவிரத மகரக் கொடியேற்றம் என்பன நடைபெறவுள்ளன.


















