-பா.பிரதீபன்-
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த, பெரும்பான்மை இனந்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்று யாழ்.கந்தர்மடம் பகுதியில் கைது செய்யப்பட்டார்
24 வயதுடைய மேற்படி மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சான்றுப்பொருளுடன் நேற்று திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


















