-த.அம்பிகாவதி-
சண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பிரிவினால் பாரம்பரிய, கிராமிய விளையாட்டுப் பயிற்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை நடாத்தப்பட்டது.
இளவாலை உயரப்புலம் அரசடி ஞானவைரவர் ஆலய அறநெறிப் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்நிழ்வில் பண்டைத் தமிழர்களின் விளையாட்டுக்களின் சிறப்புக்கள், அவற்றின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் முதலான விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் பிரதேசத்துக்குரித்தான கிராமிய விளையாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
குறிப்பாக தமிழர்களின் வீரக் கலையான சிலம்ப ஆற்றுகை இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
சிலம்பப் பயிற்சியை சிவலீமன் தற்காப்பு கலைமன்றத் தலைவர் சூ. யசோதரன் தனது மன்றத்தின் பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் சகிதம் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் உயரப்புலம் அரசடி ஞானவைரவர் ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களுடன் மாதகல் கருணை வைரவர் ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


















