மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி 9 பதக்கங்களை வென்றுள்ளது.
அதற்கமைய, 3 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற குறித்த அணி நேற்று மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்தப் போட்டி நவம்பர் 9 முதல் 16 ஆம் திகதிவரை மலேசியாவின் கோலாலம்பூரில் 19 பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 24 வீரர்கள் பங்கேற்றதுடன், அவர்களில் 7 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் உயர் அதிகாரிகள், வீரர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களை வரவேற்றுள்ளனர்.


















