-ச.தவசீலன்-
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வாடகை வாகன சாரதிகளுக்கான இரண்டுநாள் பயிற்சிநெறி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
கரைதுறைபற்று பிரதேசசபை வடக்கு மாகாண சுற்றுலாத்துறையுடன் இணைந்து இந்தப் பயிற்சி நெறியை நடத்தியது. ( முச்சக்கர வண்டி , கார் ,ஹயஸ்)

சுற்றுலா துறையின் பங்குதாரர்களாக இருக்கின்ற வாடகை வாகன சாரதிகள் சுற்றுலா பயணிகளோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதான இந்த பயிற்சி இரண்டு நாட்கள் இடம்பெற்றது.
குறித்த பயிற்சிநெறி நிகழ்வில் கரைதுறைபற்று பிரதேச சபையின் தவிசாளர் , செயலாளர், வட மாகாண சுற்றுலா பணியக அதிகாரிகள்என பலரும் கலந்து கொண்டனர்.


















