-வலி.வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்-
-இ.கலைஅமுதன்-
மாவீரர் தினத்தன்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் இறைச்சிக்கடைகளை மூடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நேற்று காலை இடம்பெற்றது.
இதன் போது பிரதேச சபை உறுப்பினர் சாருஜன் தாயக விடுதலைக்காக உயிரிழந்தவர்களை அஞ்சலிக்கும் வகையில் நவம்பர் மாதம் 27ம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
வலிகாமம் வடக்கில் பல மாவீரர் குடும்பங்கள் உள்ளமையால் நினைவேந்தலில் பங்கேற்கும் முகமாக குறிப்பிட்ட நேரத்தில் தனியார் கல்வி நிறுவனங்களையும், இறைச்சி கடைகளையும் மூடுவதுடன் அன்றைய நாளில் பொது நிகழ்வுகள் ஆடம்பரமான முறையில் நடைபெறாமல் அஞ்சலிக்கு ஒத்துழைக்குமாறு கோரியதுடன் இது குறித்தான யோசனையையும் முன்வைத்தார்.
இந்த யோசனை சபை உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.


















