பூநகரி பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட இரண்டு பொது நூலகங்கள் தேசிய அளவில் பரிசில்களைப் பெற்று சாதித்துள்ளன.
பிரதேசசபை பொது நூலகங்களுக்கு இடையிலான தேசிய வாசிப்பு மாதத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்தது என்ற வகையில் பூநகரி பொது நூலகம் தேசிய அளவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
அதேவேளை 2023 ஆம் ஆண்டு தேசிய அளவில் 2 ஆம் விருத்தினை பெற்றுக்கொண்ட பல்லவராயன்கட்டு பொது நூலகம் சிறப்புப் பரிசை பெற்றுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற தேசிய விருது வழங்கல் நிகழ்வில் கலாச்சார அமைச்சர் கலாநிதி கினிதும் சுனில் செனவியிடமிருந்து நூலகர்கள் பரிசில்களை பெற்றுக்கொண்டனர்.


















